Tuesday 9 October 2018

ராம் - ஜானு '2006



கற்பனையோ,உண்மையோ ராமுவுக்கும் ஜானுவுக்கும் வாய்த்த
அந்த நாள்,அந்த இரவு,அந்த மழை,அந்த தேநீர்,அந்த பாடல்
எல்லாருக்கும் வாய்க்காது.
அந்த விசயத்தில் ராமுவும் ஜானுவும் கொடுத்து வைத்தவர்கள்.
சொல்லாத காதலை,தெரியாமல் தேடிய தேடலை,காட்டாத பிரியங்களை,பேசாத வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்து விட்டனர் அந்த ஒரே இரவில்.

ராமுக்கும் ஜானுவுக்கும் இருபது வருடங்கள் என்றால்,
எனக்குப் பத்து வருடங்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜானுவுக்கு,நான் போன் பண்றேன் .
என் கல்யாணத்துக்குக் கூப்புடுறேன்.

"உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டயே போன் பண்ணி கல்யாணத்துக்குக் கூப்பிடுவ ?" - ஜானு .

என்னிடம் அமைதி .

மீண்டும் அவள் - "போன் பண்ண இப்போ தான் தைரியம் வந்துச்சா ?"

"ம்ம்ம்" - நான்.

" இப்போ தைரியம் வந்து யாருக்கு என்ன பிரயோஜனம் ? " 

அதுக்கு மேல என்ன பேசினோம்னு எனக்கு ஞாபகம் இல்ல ..

ஆனா என்னோட ஜானு கேட்ட அந்தக் கேள்வி -
" இப்போ தைரியம் வந்து யாருக்கு என்ன பிரயோஜனம் ? " ,
அவள் மேல உள்ள கோபம் காணாமல் போய் என் மேல எனக்குக் கோபம் வந்துச்சு..

எனக்குள்ள இருந்த குழப்பம்,கோபம்,வெறுப்பு எல்லாம் போச்சு.
நிம்மதியா இருந்துச்சு.

-நினைவுகள் தொடரும்..

ராம் - ஜானு '2006

கற்பனையோ,உண்மையோ ராமுவுக்கும் ஜானுவுக்கும் வாய்த்த அந்த நாள்,அந்த இரவு,அந்த மழை,அந்த தேநீர்,அந்த பாடல் எல்லாருக்கும் வாய்க்காது. ...